• Mon. Oct 19th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி பழனிசாமி விரைவில் சூறாவளி சுற்றுப்பயணம்

ByA.Tamilselvan

Sep 15, 2022

தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் எடப்பாடி பழனிசாம் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி வருகிறது. கட்சியை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் எடப்பாடி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறார்.
தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் பயண திட்டம் தயாரிக்கப்படுகிறது. இந்த பயணத்தின்போது கட்சி தொண்டர்களும் யார் பக்கம் என்பதை வெளிக்காட்டும் வகையில் தொண்டர்களை திரட்டவும் திட்டமிட்டுள்ளார்கள். பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இது பற்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறும்போது, அண்ணா பிறந்தநாள் விழா, ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து வருவதால் இப்போதைக்கு அதில் கவனம் செலுத்துகிறோம். சுற்றுப்பயணம் எப்போது என்பது பற்றிய விவரங்கள் அடுத்த வாரம் அல்லது இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்றனர்.