

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்திய ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்த இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் காகித விற்பனையாளர்கள் சங்கத்தினர் சார்பாக பேரணி நடைபெற்றது.

100க்கும் மேற்படடோர் பங்கேற்ற பேரணியானது முன்னதாக தேசிய கீதம் பாடி துவங்கப்பட்டது. பராசக்தி காலனியிலிருந்து துவங்கி அவரின் நான்கு ரத வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியபடியும் போர் குறித்த பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் தேசிய கொடிகளை கைகளில் ஏந்தியபடி பேரணியாக சென்று இந்திய ராணுவ வீரர்களுக்கு தங்களது ஆதரவுகளையும் தெரிவித்தனர்.

