

அதிமுகவினர் 501 பால்குடம் எடுத்து எடப்பாடி பிறந்த நாளை கொண்டாடினார்கள்.
சாத்தூர் இருக்கன்குடி கோவிலில் அதிமுக கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் ஆகியோர் தலைமையில் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு 501 பால்குடம் எடுத்து மாரியம்மன் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகளும் தேவர்களும் நடைபெற்றன.

முன்னதாக அதிமுகவினர் இப்பகுதியில் அன்னதானத்தையும் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நகர ஒன்றிய மகளிர் அணி இளைஞரணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

