• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

ஆண் பக்தர்கள் மட்டும் வழிபட்ட வினோத திருவிழா..,

ByKalamegam Viswanathan

May 22, 2026

திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சிக்கருப்பணசாமி கோவிலில் ஆண் பக்தர்கள் மட்டும் திரண்டு இருந்து சாமிக்கு மா பலா வாழை ஆகிய முக்கனிகளைபடைத்து
வழிபட்ட வினோத திருவிழா நடைபெற்றது

திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் செல்லும் வழியில் உச்சிகருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சாமி உருவம் கிடையாது ஆனால் பெரிய அளவில் 2 கல்தூண்கள் கருவறை் யாக அமைந்து உள்ளது அதில் காற்று ஒசைக்கு ஒலி கொண்டே இருக்க கூடிய வென்கலமணிகள் ஏராளமாகஉள்ளன 2 கல்தூண்களில் மையத்தில் ஐந்தடி உயரமுள்ள 2 அரிவாள் உள்ளது.

இந்த கோவிலில் பாரம்பரியமாக தொன்று தொட்டு ஆண் பக்தர்கள் மட்டுமே வழிபட்டு வருகிறார்கள் கோவிலில் தரும் விபூதியை ஒவ்வொரு பக்தரும் அவரவர் நெற்றியில் பூசிக்கொள்ளுகிறார்கள். அதே சமயம்கோவிலைவிட்டு வெளியேறும் போது நெற்றியில் பூசிய விபூதியை அழித்து விட்டு செல்லுகிறார்கள் இத்தகைய கட்டுப்பாடுகள் கொண்டுகாவல் காக்கும் கோவிலாக விளங்குகிறது இந்த கோவில் வழியாக வாகனங்களில் செல்லக்கூடிய பக்தர்கள் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தங்கள் வாகன போக்குவரத்து நல்லபடியாக நடக்க வேண்டும் என்று கனிகள் வைத்து சாமி கும்பிட்டு வருகிறார்கள்

இந்த நிலையில்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பவுர்ணமிக்கு அடுத்த வெள்ளிக்கிழமை அன்று கனி மாற்றும்திருவிழா தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகிறதுஅதேபோல இன்று கனி மாற்றும் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது
விழாவையொட்டி திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதி உள் ள சாமி பெட்டி இருக்கும் இடத்திலிருந்து ஆயிரக்கணக்கான வாழைப்பழங்கள் மாம்பழங்கள் மற்றும் பலா பழங்கள் ஆகிய முக்கனிகள் ஒரு வாகனத்தை எடுத்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக உச்சிக் கருப்பணசாமி கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் அங்கு உச்சிக்கால வேளையில் சாமிக்கு குவியலாக முக்கனிகள் படைக்கப்பட்டு மகா தீப தூப ஆராதனை நடைபெற்றது அதில் ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் டஜன் கணக்கில் பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது
அதை கோவில் வளாகத்திலேயே தனக்கு தேவைக்கேற்ப சாப்பிட்டு விட்டு மீதி பழங்களை கோவிலுக்கு வருபவர்களில் சாப்பிடுவதற்காக கோவிலிலே வைத்து சென்று விட்டனர் இதேபோல கோவில் கட்டுப்பாட்டுக்கு ஏற்ப நெற்றியில் பூசிய விபூதியை அழித்து விட்டு கோவிலிருந்து வெளியே சென்றனர்.