மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் மோசமான கொள்கையால் நாட்டில் தொடர்ந்து விலை உயர்வு மற்றும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே உள்ளது. இதை காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி அரசைக் கண்டித்து ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தலைமையில் அடுத்த மாதம் 12-ம் தேதி தலைநகர் டெல்லியில் மெகா பேரணியை நடத்த உள்ளோம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
இந்தப் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும், மிகப்பெரும் போராட்டமாக இது நடைபெறும் என்றும். மக்களின் தீராத வலியையும் துன்பத்தையும் பிரதமர் மோடி அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது எனவும் தெரிவித்தார்.