மாநிலங்களவை அறிவிக்கப்பட்ட தேதிக்கு 4 நாட்கள் முன்னதாகவே நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை இன்றுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதையும் விட குச்சலும் , குழப்பமும் அதிகமாக இருந்தது இந்த கூட்டத்தொடர். அதனால்தான் என்னவோ அறிவிக்கப்பட்ட தேதிக்கு 4 நாட்கள் முன்னதாகவே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி இன்றைய அமர்வு இறுதி அமர்வு என்று அறிவிக்கப்பட்டு,அவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.