• Fri. Feb 14th, 2025

மக்களை திசை திருப்பவே ரெய்டு-ஜெயக்குமார்

ByA.Tamilselvan

Sep 13, 2022

மக்களை திசை திருப்பவே திமுக அரசு ரெய்டு நடத்தி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
விலைவாசி உயர்வு , பேருந்து ,மின் கட்டண உயர்வு என தவித்துக்கொண்டிருக்கும் மக்களை திசைதிருப்பவே ரெய்டு நடத்தப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். காவல்துறையை ஏவிவிட்டு எதிர்கட்சிகளை குறிப்பாக அதிமுகவை அழித்துவிட வேண்டுமென்ற முனைப்போடு முதலமைச்சர் செயல்படுவதாகக் கூறிய அவர் குற்றங்களை க் கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சாடியுள்ளார்.