

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேசிய கொடியை ஏந்திய நேருவின் புகைப்படத்தை தங்களின் புரொபைல் போட்டோவாக ட்விட்டரில் மாற்றியுள்ளனர்.

பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரும் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சமூகவலைதளங்களில் உள்ள டிபியில் தேசிய கொடியை வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த நிலையில், வீடு தோறும் தேசியக் கொடி என்ற திட்டத்தின் கீழ் இம்மாதம் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றும்படி மத்திய அரசு கூறியுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேசிய கொடியை ஏந்திய நேருவின் புகைப்படத்தை தங்களின் புரொபைல் போட்டோவாக ட்விட்டரில் மாற்றியுள்ளனர். காங்கிரஸின் மற்ற தலைவர்களும் இதேபோல் தங்களின் புரொபைல் போட்டோவை மாற்றி வருகின்றனர்.
