• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி!

ByA.Tamilselvan

Aug 4, 2022

75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சுற்றுலாதளங்களை இலவசமாக பார்வையிட அனுமதி.
நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி மத்திய மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள் அருங்காட்சியங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.