நியூஸிலாந்து அணியுடன் நடக்க உள்ள 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக் குழு நேற்று அறிவித்துள்ளது.
இதில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்படவில்லை. கேப்டனாக அஜிங்கியே ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார், 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அணியில் இணைவார் என மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த வீரர்கள் ஏன் இடம் பெறவில்லை என்பதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

ரிஷப் பந்த் இல்லாத நிலையில் விருதிமான் சாஹா, ஆந்திரா விக்கெட் கீபப்ர் கே.எஸ்.பரத் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேகப்பந்துவீச்சில் டெஸ்ட் போட்டிக்கு பிரசித் கிருஷ்ணா அறிமுகமாகிறார். வேகப்பந்துவீச்சில் பும்ரா, ஷமி இல்லாத நிலையில் இசாந்த் சர்மா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.சுழற்பந்துவீச்சுக்கு ரவிச்சந்திர அஸ்வின், அக்ஸர் படேல், ஜெயந்த் யாதவ், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் உள்ளனர்.