

பெண்ணை கற்பழிக்க முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இன்று அதிகாலை நடந்த சம்பவத்தால் மதுரையில் பரபரப்பு.
மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ளது செண்பகத்தோட்டம். இங்கு உள்ள மீனவர் சங்க கட்டிடம் அருகே ஒரு பெண்ணை இன்று அதிகாலை அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி குருவி விஜய் கற்பழிக்க முயன்ற போது அந்தப் பெண் கூச்சலிட்டு உள்ளார்.
அக்கம்பக்கத்தில் உள்ள 100க்கு போன் செய்ததால் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் குருவி விஜய் மற்றும் அவனது கூட்டாளிகள் போலீசாரை தாக்க முயன்றனர். அச்சமயம் போலீசார் சுட்டதில் ரவுடி குருவி விஜய்க்கு காலில் காயம் ஏற்பட்டது.
ரவுடி குருவி விஜய் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடித்து போலீசார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். காலில் காயம்பட்ட நிலையில் ரவுடி குருவி விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இப்படிப்பட்ட ரவுடி கூட்டாளிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.அதிகாலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் மதுரை அண்ணாநகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
