

மதுரை மாட்டுத்தாவணி நக்கீரர் தோரணவாயில் இடிந்து விழுந்து உயிரிழந்த நாகலிங்கம் குடும்பத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார்.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இருந்த நக்கீரர் தோரணவாயில் இடிக்கும் பணியில் ஈடுபட்ட போது தூண் இடிந்து விழுந்த விபத்தில் பொக்லைன் ஆப்பரேட்டர் நாகலிங்கம் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் பேசி நிவாரணம் வழங்கவும், அரசு வேலை வழங்கி உதவ வேண்டும் என தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமால் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மூன்றாவது மகன் நாகலிங்கம். இவர் பொக்லைன் ஆப்ரேட்டர் கடந்த 12ஆம் தேதி ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு கட்டப்பட்ட நக்கீரர் தோரண வாயில் போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் இடிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் இடிக்கும் பணியின் போது ஒருபுறம் உள்ள தூண் அருகே பொக்லின் இயந்திர ஆபரேட்டர் இடித்த போது திடீரென தோரணவாயில் தூண் இடிந்து பொக்லைன் இயந்திரத்தில் விழுந்தது. இதில் நாகலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் திருமால் கிராமத்திற்கு நேரில் சென்று நாகலிங்கம் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து நாகலிங்கம் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது நாகலிங்கம் குடும்பத்தார் தங்களுடைய மகன் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் நிவாரணம் வழங்கவும் குடும்பத்தில் தன்னுடைய மற்றொரு மகனுக்கு வேலை வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களிடம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் கூறும் போது..,
மதுரை மாட்டுத்தாவணி அமைக்கப்பட்டிருந்த நக்கீரர் நுழைவுவாயில் அது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக பல்வேறு வகையில் விவாதம் ஏற்பட்டு நீதிமன்றத்திற்கு சென்று நீதிமன்றத்தில் நீதி அரசர்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அப்புறப்படுத்தி அதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்கள். அதிமுக சார்பில் நக்கீரர் நுழைவு வாயில் என்பது பாரத ரத்னா எம்ஜிஆர் உலகத் தமிழ் மாநாடு நடத்தும்போது அடையாளமாக நிறுவினார்கள். அதனைக் காப்பாற்றும் வகையில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும், அதை அகற்றும் போது எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் நாகலிங்கம் இடிப்பு பணியில் ஈடுபட படுத்திருந்தார். அவர் திருமால் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமணமாகாதவர் அவருடைய இறப்பு பெற்றோர்கள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர் நாகலிங்கம் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவதோடு அவர்களுடைய சகோதரருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கையாக கொடுத்துள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனு வாங்குவதற்கு அழைப்பு கொடுத்துள்ளார். அரசும் நாகலிங்கத்தை வேலைக்கு அமர்த்திய நிறுவனமும், குடும்ப வறுமை போக்குவதற்கு நிவாரணம் அரசு வேலையும் வழங்கினால், அவர்களுடைய குடும்பத்தில் விளக்கு ஏற்றியது போல் இருக்கும்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் கவனத்தில் கொண்டு செல்வோம் உரிய நிவாரணம் தரவில்லை என்றால் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பாகவும், எடுத்துச் செல்வோம் நீதி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
ஆறுதலின் போது முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மாநில நிர்வாகி ராமகிருஷ்ணன் மாவட்ட பொருளாளர் திருப்பதி மீனவர் அணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டியன் ஒன்றிய செயலாளர்கள் கண்ணன் பிரபுசங்கர் ராமையா ஒன்றிய கவுன்சிலர் ஆதிராஜா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

