மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் அண்டை மாநிலங்களில் வழங்குவது போன்று உதவி தொகையை உயர்த்தி வழங்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,

அண்டை மாநிலங்களில் 6 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக வழங்குவது போன்று தமிழ்நாட்டிலும் உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்., புதிதாக உதவித் தொகை பெற விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உடனடியாக உதவித்தொகையை வழங்க கோரியும் 100 க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.,





