



உசிலம்பட்டி அருகே பழமை வாய்ந்த அங்காள ஈஸ்வரி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் பழமை வாய்ந்த அங்காள ஈஸ்வரி மற்றும் நொண்டி கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 51 அடி கோபுரத்துடன் அர்த்த மண்டபம் எழுப்பி இன்று கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக சிவாச்சாரியார்கள் மூன்று கால யாக பூஜைகள் செய்து, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்து, கருவறையில் உள்ள அங்காள ஈஸ்வரி மற்றும் கருப்பசாமி சிலைகளுக்கு பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு பூஜை செய்தனர்.

இந்த விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் விழா கமிட்டியினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

