
புதுச்சேரி முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல்வர் ரங்கசாமி முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும் இந்த ஆட்சிக்கு பாஜக ஆதரவு தந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதுச்சேரியில் ரங்கசாமியின் ஆட்சியை தவிர்த்துவிட்டு பாஜக ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் முதல்வர் ரங்கசாமி முன்னாள் பிரதமர் மோடியை டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது புதுச்சேரி அரசியல் மற்றும் பொது நலன் குறித்த திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
