• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, இணைந்து இலவச பொது மருத்துவ முகாம்..,

ByP.Thangapandi

Aug 23, 2026

தமிழ்நாடு வைகை கரம் கொடுக்கும் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக மதுரை என்டிசி மருத்துவமனை, ஞானம் பல் மருத்துவமனை, ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தில் உள்ள ராஜாஜி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இம்மாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் சிகிச்சை,பல் சிகிச்சை, மற்றும் சர்க்கரை நோய், உயிர் ரத்த அழுத்தம், இசிஜி பரிசோதனை, ஆகியவை இலவசமாக முகாமில் வழங்கப்பட்டது. பொதுவான நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

இம்மாமினை தமிழ்நாடு வைகை கரம் கொடுக்கும் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் பி.சிங்கம் தலைமையேற்று நடத்தினார்.

மாநில பொதுச் செயலாளர் சாதிக் பாட்சா முன்னிலை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி மற்றும் மாநில துணைச் செயலாளர் கணேஷ் பாபு மாநில துணைச் செயலாளர் முத்துக்குமார் மற்றும் மாநில நிர்வாகிகள் சையது முகமது மோகன் சுந்தரபாண்டி தியாகராஜன் பழனி துரைப்பாண்டி வடிவேல் கதிரேசன் மணி ஆகியோர் இம்மகாமினை ஏற்பாடு செய்திருந்தனர்.