• Fri. Mar 29th, 2024

6,7 மற்றும் 8-ம் வகுப்புக்கான மதிப்பீட்டு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

Byகாயத்ரி

Dec 23, 2021

தமிழகத்தில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதில், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி, தமிழகத்தில் ஜனவரி 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை மதிப்பீட்டு தேர்வு நடத்த உத்தரவிட்டு இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அதில், ஜனவரி 5-ம் தேதி மொழிப்பாடம், ஜனவரி 6-ம் தேதி ஆங்கிலம், ஜனவரி 7-ம் தேதி கணிதம், ஜனவரி 8-ம் தேதி விருப்பம் மொழி, ஜனவரி 10-ம் தேதி அறிவியல், ஜனவரி 11-ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், மொழிப்பாடங்கள் மதியம் 2 மணிக்கு தொடங்கி 3.15 வரையும், இதர பாடங்கள் மதியம் 2 மணிக்கு தொடங்கி 3 மணி வரையும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *