• Sat. Oct 24th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கும் செந்தில்

விஜய் டிவியின் ‘மதுர’ தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகராக களமிறங்கினார் ஆர் ஜே செந்தில். தொடர்ந்து சில படங்களிலும், விஜய் டிவியின் ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது இரட்டை வேடத்தில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற தொடரில் நடித்து வருகிறார். இது மிக விரைவில் முடியப் போவதாக தகவல் வெளியானது.

இதற்கிடையில் அவர் தற்போது மற்ற தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களில் தோன்றவுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆர் ஜே செந்தில் நடுவராக பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சி வருகிற டிசம்பர் 26 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்நிலையில் அவர் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ள ‘ஜகமே தந்திரம் கதைகள்’ என்ற நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்யவுள்ளதாக தகவல்கள் மற்றும் சில புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது. இந்த நிகழ்ச்சி அமீர் கானின் ‘சத்யமேவ ஜெயதே’, கோபிநாத்தின் ‘குற்றம்’ நிகழ்ச்சிகள் போல சமூகம் சார்ந்த பிரச்னைகளை பேசும் நிகழ்ச்சியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 27 முதல், திங்கள் முதல் வெள்ளி வரை இரவும் 10:30 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது.