• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கன்னியாகுமரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் அனைத்துக்கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தமிழக வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்அதன்படி தமிழகத்தில்
6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர் இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,20,41,179 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,04,89,866, பெண் வாக்காளர்கள் 3,15,43,286 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,027 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.வாக்காளர் பட்டியலினை தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரை சரிபார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஒவ்வொரு மாவட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா அரவிந்த் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023 அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலைவெளியிட்டார்