• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தரமற்ற தார் சாலை- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கன்னியாகுமரி அருகே போடப்பட்ட தரமற்ற தார்சாலையில் பொதுமக்கள் அவதி.. ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தம்பத்துக்கோணம் முதல் ராஜக்கமங்கலம் வரை உள்ள நெடுஞ்சாலையில் தனியார் ஒப்பந்ததாரர் ஆர்.பி.ஆர் ரூ.1 கோடி மதிப்பீட்டில் போடப்படும் தார் சாலை தரமற்று போடப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.சாலை போட்ட மறுநாளே சாலைகள் பெயர்ந்து சல்லிகள் வெளியே வந்து விபத்து ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர்.விபத்து ஏற்பட்ட வாகன ஓட்டிகள் மருத்துவமனை அனுமதிப்பட்டுள்ளனர்.அதே நேரத்தில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கேள்வி கேட்ட பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலைமிரட்டல் விடுத்து வருகிறார் ஒப்பந்ததாரர் ஆர்‌பி.ஆர்.அவ்வழியாக பயணம் செய்யும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து ஒப்பந்ததாரர் ஆர்.பி‌ஆர். மீது நடவடிக்கை எடுத்து ஒப்பந்தத்தை ரத்துசெய்ய பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்..