களியக்காவிளை அருகே அதிக பாரத்துடன் கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி சென்ற 3 லாரிகள் பறிமுதல். குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் 100-க்கணக்கான லாரிகளில் அதிக பாரத்துடன் கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த லாரிகள் இரவு, பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை களியக்காவிளை போலீசார் பி.பி.எம். சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார் அதனை களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.