

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள காரியாபட்டி முஸ்டக்குறிச்சி, கொட்டங்குளம் கண்மாயில் கிராவல் குவரி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த முஸ்டக்குறிச்சி, கொட்டங்குளம், கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு அதிகாரிகள் முன்பு கிராவல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பு தெரிவித்தவர்களை அதிகாரிகள் அப்புறப்படுத்த முயன்ற போது, மூன்று பெண்கள் உள்பட ஐந்து பேர் காயமடைந்தனர். காயமடைந்த ஐந்து பேரை காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கிராம மக்கள் தொடர்ந்து அதிகாரிகளை முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


