


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் கேசவராஜன் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு, தீ விபத்துகளில் இறந்த பணியாளர்களை நினைவுபடுத்தும் வகையில் தீயணைப்பு நிலைய வளாகத்தில் தீ விபத்தில்இறந்த வீரர்கள் பெயர் சொல்லி அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர் பாண்டியன தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு, தீயணைப்பு நிலைய வளாகத்தில் தீ விபத்தில் இறந்த பணியாளர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.



