பி.எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி தயாரிப்பாளர் PSR பிரதீப் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன்.ஜி இயக்கும் ‘கருப்பு கண்ணாடி’ படத்தின் படப்பிடிப்பு, சென்னை, சைதாப்பேட்டை லைட்ஸ் ஆன் ஸ்டுடியோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது!
சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகும் ‘கருப்பு கண்ணாடி’ படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் சுப்ரமணிய சிவா துவக்கி வைத்தார்.
கருப்பு கண்ணாடி திரைப்படத்தில் நடிகர் தணிகை, சுப்ரமணிய சிவா, துர்கா, ஜிஜினா, ராஜா சிம்ஹா, காகராஜ், பாடகர் வேல்முருகன், மாப்பு ஆண்ட்ரூஸ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளராக சம்சாத், இசையமைப்பாளராக சித்தார்த்தா பிரதீப், ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.