பேரறிவாளன் விடுதலையை எதிர்த்துசாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாயில் துணியை கட்டிக்கொண்டு அறப்போராட்டம் நடத்தப்பட்டது.
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளி பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து அறப்போராட்டம் காலை 10 மணி முதல் 11 மணி வரை வாயில் துணியை கட்டிக்கொண்டு போராட்டம் நடத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்தது.அதன் அடிப்படையில் சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக சாத்தூர் வடக்கு ரத வீதியில் காங்கிரஸ் தொண்டர்கள் வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு அறவழிப் போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் தலைமை வகித்தார். சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டிதகமிட்டி தலைவர் அய்யப்பன் சாத்தூர் கிழக்கு வட்டார தலைவர் சுப்பையா மாவட்ட செயலாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .நகர துணைத்தலைவர் சின்னப்பன் ஆறுமுகம் நகர பொதுச் செயலாளர் ரவி ஆட்டோ ராஜ்குமார் வட்டார துணைத்தலைவர் ஒத்தையால் முத்துவேல் பரத் ராஜ் வட்டார செயலாளர் சத்திரப்பட்டி லட்சுமணன் சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திக் சங்கரபாண்டியன் மணிவண்ணன் நகர மகளிர் காங்கிரஸ் தலைவி எலிசா ஆகியோர் கலந்து கொண்டனர்
சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக அறப்போராட்டம்
