சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடற்பயிற்சி, ஆரோக்கியத்தை வலியுறுத்தி விருதுநகர் கிராமபுற பகுதிகளில் கல்லூரி மாணவ,மாணவியர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியின் பவளாவிழா ஆண்டை முன்னிட்டு உடற்கல்லூரி மாணவர்கள் 50 பேர் சைக்கிள் பயணமாக விருதுநகரிலிருந்து பிளவக்கல் அணைக்கட்டு பகுதிவரை சென்றனர். இச் சைக்கிள் பேரணிமூலம் வழிநெடுகிலும் உள்ள கிராமங்களில் சுற்றுபுறசூழல் பாதுகாப்பு, உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக சைக்கிளில் பாதகைகளுடன்,விழிப்புணர்வு துண்டு சீட்டுகளை விநியோகித்தனர். இந்நிகழ்ச்சிகளுக்கு உதவியாக விடியல் அரிமா சங்கமும்,வத்றாப் அரிமா சங்கமும் செயல்பட்டது. நிகழ்ச்சியை கல்லூரி செயலாளர் சர்ப்பராஜன் துவக்கி வைத்தார்.கல்லூரி தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.விடியல் அரிமா சங்கத்தின் தலைவர் சாரதி ,உறுப்பினர்கள் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி பொருளாளர் சக்திபாபு மாணவ,மாணவியருக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.கல்லூரி முதல்வர் சுந்தரபாண்டியன் ,சுயநிதிபிரிவு ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை தலைவர் குழந்தைவேலு ,முருகேசன்,செல்வக்குமார்,யாகலட்சுமி,முத்துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியிலி பங்கேற்ற மாணவ,மாணவியரை கிராமத்துபொதுமக்கள் பாராட்டினர்.