


தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டது. தினமும் நடக்கும் கொலைகளால் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று திமுக அரசு கண்டித்து வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

அதன்படி நாகையில் உள்ள வீடுகளில் பாஜகவினர் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.மாவட்ட பொதுச் செயலாளர்.வைரமுத்து அவரது இல்லத்தில் கருப்பு கொடி ஏற்றினார்.


