• Mon. Apr 28th, 2025

நாகை மாவட்டத்தை சேர்ந்த கலை குழுவினர் ஆர்வத்துடன் பங்கேற்பு..,

ByR. Vijay

Mar 22, 2025

தமிழக கலை பண்பாட்டு துறை சார்பில் தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி மூலம் கலைக்குழு தேர்வு போட்டிகள் நடத்தப்பட்டு 38 மாவட்டங்களிலும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்ட அளவிலான கலை குழுக்களை தேர்வு செய்யும் நிகழ்வு இன்று நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயபாலன் தலைமையில் நாகை மாவட்டத்தை சேர்ந்த நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பை கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு மற்றும் பல்கவை நிகழ்ச்சி வழங்கும் கலைக்குழுக்கள் இன்று பங்கேற்றனர்.

18 வயதுக்கு மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் குழுவாக இதில் பங்கேற்ற தங்களைத் திறன்களை வெளிப்படுத்தினர். இதில் தேர்வு செய்யப்படும் குழுக்கள் மண்டல மற்றும் மாநில அளவிலான சங்கமம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.