• Wed. Dec 11th, 2024

செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு!

தேனியில் கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, 33 வது மாவட்ட அளவிலான செஸ் போட்டி அகாடமி வளாகத்தில் (டிச.26) நடந்தது.
இதில் 9, 11 மற்றும் 13 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுப் பிரிவினர் என, 4 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.

அகாடமி செயலாளர் R. மாடசாமி தலைமை வகித்தார். துணை தலைவர் M. நவீன், இணைச் செயலாளர் அமானுல்லா முன்னிலை வகித்தனர். போட்டிகளை தேனி ரோட்டரி கிளப் சென்ட்ரல் ஜெம்ஸ் பட்டையத் தலைவர் S.ஜெயமணி துவக்கி வைத்தார் , சிறப்பு அழைப்பாளராக தேனி மகிழ்நிதி நிதி நிறுவன உரிமையாளர் S.கதிரேசன் கலந்து கொண்டார்.

வென்ற மாணவ, மாணவியற்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் S.ராதா கொரோனா மற்றும் ஒமைக்கிரான் தொற்று பரவும் விதம் மற்றும் அவற்றில் இருந்து நாம் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

அகாடமி தலைவர் S.சையது மைதீன் வரவேற்றார், விழா ஏற்பாடுகளை போட்டி இயக்குனர் S. அஜ்மல்கான் செய்திருந்தார். போட்டி நடுவர்களாக S.வாசி மலை, V.ஹரிஹரன் செயல்பட்டனர் .
வெற்றி பெற்றவர்கள்:
(9 வயது பிரிவு)
1, R.பரத் 2, S.சாய் ரிஷி 3, V.ஜெய்அபிஜித் 4, S. விசாகன் 5, M.தேவிகா
(11 வயது பிரிவு) 1, P.தஸரதன், 2, M.நந்தகிஸோர், 3, P.ஜிஸ்னு 4, K.ஜோஸ்வா சாய்வர்ஸன், 5, D.ஹஸ்வன்ந்,
(13 வயது பிரிவு)
1, S.R.M தர்ஸ்சன் , 2, K.திஸ்மிக்காசாய், 3, R.பரத், 4, G.கமலேஸ்வர், 5, R.சுர்தீஸ்
(பொதுப் பிரிவு)
1,C. பிரணவ், 2, R.S.பாண்டியன், 3, J.மனோரஜ்ஜன், 4, P.பிரவீன்குமார், 5, S.சகானா வெற்றி பெற்றனர்.
இவர்கள் வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினவிழா அன்று எங்கள் அகாடமி சார்பில் தேனி அன்னப்பராஜா மண்டபத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளனர். சிறந்த பள்ளிக்கான விருதினை தேனி கம்மவர் சங்க பப்ளிக் CBSC பள்ளி மாணவர்கள் பெற்றனர். அகாடமி தலைவர் S.சையது மைதீன் நன்றி கூறினார்.