• Wed. Dec 11th, 2024

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்.., இன்று ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு..!

Byவிஷா

Dec 27, 2021

ஜனவரியில் ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட் இன்று(27ம் தேதி) காலை 9 மணிக்கு தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இதில், வைகுண்ட ஏகாதசியையொட்டி வருகிற 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 5,000 வீதம் டிக்கெட் வழங்கப்படும்.


மீதமுள்ள நாட்களுக்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வீதம் டிக்கெட்டுகள் வழங்கப்படும். எனவே, பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.