• Wed. Jul 29th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

பாண்டியராஜபுரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா..,

மதுரை மாவட்டம் பாண்டியராஜபுரம் அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக அரசு பொதுத் தேர்வுமற்றும் 11ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்றிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கும்,ஆக்கி அணி வீரர்களுக்கும் கல்வி மற்றும் விளையாட்டு ஊக்கத்தொகை நினைவு பரிசு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் பரிசளிப்பு வழங்கும் விழா நடந்தது.

இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
முன்னாள் மாணவர்கள் பாலு, சங்கத் தலைவர் லெச்சர்கான் சாகுல் ஹமீது ஜோசப் அமல்ராஜ்,பொருளாளர் பரணி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.துணைத் தலைவர் செந்தாமரைக்கண்ணன் வரவேற்றார்.இந்த விழாவில் அரசு பொது தேர்வில் 10 மற்றும் 12ஆம் வகுப்பும், முழு ஆண்டு தேர்வில் 8ஆறாம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கும் ஆக்கி போட்டியில் தமிழ்நாடு லெவல் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஹாக்கி அணியினருக்கும் கல்வி மற்றும் விளையாட்டு ஊக்கத்தொகை நினைவு பரிசு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பாராட்டி தலைமை ஆசிரியருக்கு நினைவு பரிசு கேடயங்கள் வழங்கப்பட்டன. இதில் செயற்குழு உறுப்பினர்க சோனை சிவக்குமார்,ரமேஷ் ,மற்றும் முன்னாள் மாணவர்கள் செல்வராஜ் ,தனபால் சிவா, பிச்சைமுத்து, சிவரஞ்சனி, கிருஷ்ணவேணி, இயற்கை மருத்துவர் பாரதி சமூக சேவகி ஜெனிபர், பாரதிராஜா, இசக்கிமுத்து, சங்கர், சரவணகுமார், குப்புசாமி ,வேல் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு டனர்.பொதுச் செயலாளர் ராமராஜன் தொகுத்து வழங்கினார். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.