• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

தண்ணீர் பஞ்சம் போராடத் தொடங்கிய பெண்கள். சமரசம் செய்த சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா…

Byமுகமதி

Jul 28, 2026

புதுக்கோட்டையில் குடிதண்ணீர் பிரச்சினை பெரும் பிரச்சனையாக இருக்கிறது. தீர்க்க முடியாத பிரச்சினையாகவும் இருக்கிறது. இந்த நிலையில் இன்று மதியம் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பாலன் நகர் விரிவாக்கம் மற்றும் காளி கோயில் தெரு பகுதியில் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் போராட்டத்திற்கு தயாரானார்கள்.

வீதிக்கு வந்த பெண்களிடம் விசாரித்த போது கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பகுதிக்கு மிகவும் குறைந்த அளவே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த நான்கு மாதமாக தண்ணீரே வருவதில்லை. முன்பெல்லாம் வாரத்திற்கு இரண்டு முறை பிறகு ஒரு முறை அப்புறம் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை என்று வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக சுத்தமாகவே புனித நீர் வருவது நின்று போய்விட்டது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடமும் மாநகர தாயிடமும் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை அதனால் வீதிக்கு வந்திருக்கிறோம் என்றனர்.

இந்த தகவல் அறிந்து அந்த இடத்திற்கு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் (திமுக) டாக்டர் வை. முத்து ராஜா போராட தயாராக வந்த பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர் திமுக ஆட்சியின் போது கொண்டு வந்த செயல்படுத்திய பல பணிகளை தற்போது நிறுத்தி விட்டார்கள் சில பணிகள் மிகவும் தாமதமாக செய்து கொண்டிருக்கிறார்கள். அது பேருந்து நிலையம் கட்டுவது, பாதாள சாக்கடைத் திட்டம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் ஆர் ஓ சுத்திகரிப்பு தண்ணீர் திட்டம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. பல பணிகளை நிறுத்தியே விட்டார்கள். அந்த வகையில் இப்போது மாநகராட்சி பகுதிக்குள் உங்களுக்கெல்லாம் குடிதண்ணீர் பிரச்சினை வந்திருக்கிறது.

அதை விரைந்து செயல்படுத்த விரைவில் குடிதண்ணீர் கிடைக்க மாநகராட்சி ஆணையரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் நான் பேசுகிறேன். அவர்கள் செய்யாத பட்சத்தில் இந்த பகுதிக்கு மூன்று அல்லது நான்கு லட்சம் ரூபாய் செலவில் குடிதண்ணீர் கிடைப்பதற்கு சிறப்பான ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார். அவருடன் திமுக பெண் நிர்வாகி சித்ரா உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர். சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா உறுதியளித்ததை நம்பி அந்தப் பெண்கள் போராடுவதைக் கைவிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துச் சென்றனர்.