• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

குடிதண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

ByKalamegam Viswanathan

Jul 28, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் கிராமத்தில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தனக்கன்குளம் பிஆர்சி காலனியில் கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் வராததால் ஆத்திரமடைந்த பெண்கள் கையில் காலி தண்ணீர் குடங்களை ஏந்தி கொண்டு தனக்கன்குளம் பிரதான சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதி பரபரப்பானது பெண்கள் சாலையின் நடுவே காலி குடங்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த திருநகர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தவுடன் மறியலில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தனக்கன்குளம் பி ஆர் சி காலணியில் உள்ள தண்ணீர் குழாய்களிலும் தண்ணீர் வரவில்லை நீர்த்தேக்க தொட்டிகளிலும் நீரை ஏற்றி பராமரிப்பது இல்லை.

300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து 400 ரூபாய்க்கு தண்ணீர் வாங்க முடியுமா என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.