காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்த வண்ணம் உள்ளது. கடந்த 5 நாட்களில் நடந்த தாக்குதலில் மட்டும் 7 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘நமது காஷ்மீரத்து சகோதரிகள், சகோதரர்கள் மீது அதிகரித்துவரும் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் வலியை ஏற்படுத்துகின்றன. அவை மிகவும் கண்டனத்துக்கு உரியவை. இந்த கஷ்டமான நேரத்தில் நாங்கள் நமது காஷ்மீர சகோதர, சகோதரிகளுடன் இருக்கிறோம். காஷ்மீரில் அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.