• Mon. May 6th, 2024

மிளகாய் பொடி தூவி மகளை கடத்த முயற்சி செய்த பெற்றோர்

Byவிஷா

Apr 24, 2024

மகள் காதல் திருமணம் செய்ததை ஏற்றுக் கொள்வது போல நடித்து, திருமண வரவேற்பு மேடையில் மிளகாய் பொடியை தூவி மகளை கடத்த முயற்சி செய்த பெற்றோரால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கங்காவரத்தை சேர்ந்த சினேகாவும், அதே மாநிலத்தை சேர்ந்த வெங்கடானந்துவும் நரசரவ்பேட்டையில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படிக்கும் போது காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் 13ம் தேதி விஜயவாடாவில் உள்ள பிரசித்தி பெற்ற துர்கா கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்ததும் சினேகா தனது கணவர் வெங்கடானந்தம் வீட்டிற்கு சென்றார்.
இந்த விஷயம் இரு வீட்டாருக்கும் தெரியப்படுத்த குடும்பத்தினர் பேசி திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக ஏப்ரல் 21ம் தேதி திருமண வரவேற்பு நிர்ணயிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கடியம் என்ற இடத்தில் இந்த விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சினேகாவின் பெற்றோரும் அழைக்கப்பட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த சினேகாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மணப்பெண் அலங்காரத்தில் இருந்த சினேகாவை வலுக்கட்டாயமாக மண்டபத்தில் இருந்து கடத்தி செல்ல முயன்றனர்.
சினேகாவை தடுத்து நிறுத்திய மணமகன் குடும்பத்தினர் மீது மிளகாய் பொடியை வீசினர். இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் மணமகன் வீட்டார் சினேகாவை அவரின் குடும்பத்திடம் இருந்து பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மோதலில் மணமகனின் உறவினர் ஒருவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி சினேகா கூறும்போது, “எனது அம்மா, தம்பி மற்றும் உறவினர்கள் வந்து என்னை கடத்த முயன்றனர். இதற்காக அவர்கள் என் மீதும், மாமியார் குடும்பத்தினர் மீதும் மிளகாய் பொடியை வீசினர். எதற்காக திடீரென இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை, என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *