• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சென்னை ராணி மேரி கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Byவிஷா

Feb 24, 2024

சென்னை ராணி மேரி கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். தனியார் துறையில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் இதில் கலந்துகொண்டு பயன் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது