அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் ஆம்னி பேருந்துகளுடைய உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் அதிகமாக கட்டணம் வசூல் செய்வதாகவும், அது தொடர்பாக அடிக்கடி புகார்கள் வருவதாகவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும் அரசாணை அமல்படுத்தும்படி, அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த விசாரணையில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பல வழக்குகளை நீதிமன்றம் உத்தரவிட்டது. வெறும் அபராதம் விதிப்பதால் மட்டும் தீர்வு கிடைப்பதில்லை. அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று அடிக்கடி கண்காணிக்க வேண்டும். தொடர் வசூலில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கான உரிமத்தை ரத்து செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதால் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
