• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்

ByA.Tamilselvan

Sep 26, 2022

ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் செல்கிறார்.
ஜப்பான் நாட்டின் பிரதமரான ஷின்சோ அபே (67), நரா என்ற இடத்தில் ஜூலை மாதம் 8-ம் தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் டெட்சுய யமகாமி என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் அந்நாட்டையே உலுக்கியது. ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கு 12-ம் தேதி டோக்கியோவில் நடந்தது. அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதற்கிடையே, ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சி அந்நாட்டு அரசு சார்பில் 27-ம் தேதி டோக்கியோவில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் செல்கிறார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பிரதமர் மோடி தனது ஜப்பான் பயணத்தின்போது அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்துப் பேச உள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.