குஜராத்தில் நடைபெற்று வரும் வேளாண் உச்சி மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, திருவள்ளுவர் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன் வேளாண்மை பற்றி எழுதிய குறளை விரிவாக விளக்கியுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் ஆனந்தில் நடைபெற்ற இந்த தேசிய வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் உச்சி மாநாட்டின் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துகொண்டார்.
இந்த மாநாட்டில் பேசிய அவர், சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, வேளாண்மையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும். குஜராத் அரசின் வேளாண் திட்டங்கள் நாட்டிற்கே வழிகாட்டுகின்றன. விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உணவு பதப்படுத்துதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. குறைந்த பட்ச ஆதார விலை ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் திருவள்ளுவர் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன் வேளாண்மை பற்றி விரிவாக விளக்கியுள்ளார். மண் வளம் பாதுகாப்பு பற்றி காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார் என பிரதமர் மோடி கூறினார்.