

மதுரை ஆனையூர் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்
பள்ளியில், தமிழகத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மேற்கு வட்டார கிளையின் சார்பில் , தேர்தல் ஆணையர் லூர்து சேகரன் மற்றும் துணை தேர்தல் ஆணையர்ஜெரால்டு ஆகியோரால் தேர்தல் நடைபெற்றது.தலைவராக முத்துலட்சுமி,துணைத் தலைவர்களாகடேவிட் சாமுவேல், தேன்மொழி, விமலா ராணி, செயலாளர் சிவபாலன், துணைச் செயலாளர்களாக ஜானகி, ஜெய வீரபாண்டியன், நாகராணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், பொருளாளராக தமிழரசி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக இராஜாங்கம், லூர்து மேரி, செயற்குழு உறுப்பினர்களாக மெர்சி மார்கிரேட் ஹில்டா, சுகுணா, சபியா பேகம், இந்திராணி, பிரின்சி வசந்தரா தேவி, டெய்சி, வாழவந்தாள், ஜெபமணி, மேரி கெப்சி பாய், கிரிஜா தேவி
மற்றும் சுகந்தி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட ச்
செயலாளராக இராஜேந்திரன் பொறுப்பாளர்களை வாழ்த்தி இயக்க பேருறை ஆற்றினார். ஒருங்கிணைப்பாளர்தமனோகர், செல்வராஜ், நாகராஜ்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.உதய ராஜா, ஜான் குணாளன், சாந்தி, நாகலெட்சுமி, கிருஷ்ண வேணி, சாந்தி மற்றும் ஜெயராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில்,
பொருளாளர் தமிழரசி நன்றி கூறினார்.

