• Wed. Mar 19th, 2025

இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாத நோன்பு தொடக்கம்

ByKalamegam Viswanathan

Mar 2, 2025

இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாத நோன்பு தொடக்கம் – முதல்நாளில் பள்ளிவாசல்களில் இரவு சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்.

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் மாத நோன்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இதற்காக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் தராவிஹ் எனப்படும் இரவு நேர சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு பிராத்தனையில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து அதிகாலையில் 5 மணி முதல் சஹர் எனப்படும் சூரிய உதயத்திற்கு முன்பான நேரத்தில் தங்களது நோன்பினை தொடங்கும் இஸ்லாமியர்கள் பகல் முழுவதிலும் உணவு அருந்தாமலும், தண்ணீர் அருந்தாமலும் தங்களது நோன்பை கடைபிடிப்பர் இதனையடுத்து மாலை 6.35 மணிக்கு மேல் சூரியன் மறையும் போது தங்களை அன்றைய நோன்பை முடித்துக்கொள்வர் இதேபோன்று 30நாட்களிலும் இஸ்லாமியர்கள் தங்களது கடமைகளின் ஒன்றான நோன்பினை நோற்பார்கள்

மதுரை மாவட்டத்திற்குட்பட்ட மகபூப்பாளையம், நெல்பேட்டை, அண்ணாநகர், வள்ளுவர்காலனி, கலைநகர், மற்றும் புறநகர் பகுதிகளான திருப்பரங்குன்றம், மேலூர், திருமங்கலம், சிலைமான், சோழவந்தான், உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் இரவு நேர சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது உலக நன்மைக்காக பிராத்தனையில் ஈடுபட்டனர்.