• Thu. Apr 25th, 2024

அதிபர் புதின் இந்தியாவுக்கு புகழாரம்

ரஷிய ஒற்றுமை தினத்தில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் சந்தேகமேயின்றி வளர்ச்சியில் இந்தியா சிறந்த சாதனை படைக்கும் என புகழாரம் சூட்டியுள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா கடந்த 8 மாதங்களுக்கும் கூடுதலாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ரஷியாவின் ஒற்றுமை தினம் ஆண்டுதோறும் நவம்பர் 4-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, இந்தியாவை பாருங்கள். உள்நாட்டு வளர்ச்சிக்கு தேவையான ஒரு திறமையான, கடுமையாக உழைக்க கூடிய மக்களை கொண்டுள்ளது. வளர்ச்சி என்று வரும்போது, இந்தியா நிச்சயம் சிறந்த சாதனைகளை படைக்கும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏறக்குறைய 150 கோடி மக்கள் உள்ளனர். அதுவே அவர்களுக்கான ஆற்றலாக உள்ளது என கூறியுள்ளார். அவரது இந்த பேச்சின்போது, ஆப்பிரிக்கா நாட்டின் காலனி நடைமுறைகளை பற்றியும் குறிப்பிட்டார். ஆப்பிரிக்கா நாட்டை மேற்கத்திய நாடுகள் கொள்ளையடித்து, சூறையாடி சென்று விட்டன. அது ஒரு வெளிப்படையான உண்மை. கொள்ளையடித்தல், அடிமை வர்த்தகம் ஆகியவை நடந்தன. ஆப்பிரிக்க மக்களுக்கு பாதிப்பும், துயரமும் ஏற்படுத்தியே ஐரோப்பா இன்று கட்டப்பட்டு உள்ளது. ஐரோப்பியா நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இதனை மறைக்கவில்லை என அவர் பேசியுள்ளார். ரஷியா எப்படி தனித்துவம் வாய்ந்த நாகரீகம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றை கொண்டுள்ளது என்பது பற்றியும் அவர் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *