• Thu. Mar 28th, 2024

தேனி மாவட்டத்தில் வேளாண்மை வளர்ச்சித் திட்டபணிகள் வழங்கல் நிகழ்ச்சி

Byvignesh.P

Jun 7, 2022

தேனி வடபுதுப்பட்டி அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டபணிகள் வழங்கல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
தேனி மாவட்டம் 130 ஊராட்சிகளை உள்ளடக்கியது.இந்த ஊராட்சிகளில் வடபுதுபட்டி ,எண்டபுளிபுதுபட்டி உள்ளிட்ட 13ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து அங்கு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்ட பணிகள் வழங்கும் நிகழ்ச்சிஇன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக இன்று வடபுதுபட்டியில் கிராமங்களுக்கு பட்டா சிட்டா மாறுதல் மற்றும் பிரதமரின் திட்டங்களை செயல்படுத்துதல், யூரியா மற்றும் சொட்டு நீர் பாசனம் விவசாய கடன் மானிய விலையில் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தோட்டக்கலை துணை இயக்குனர் பாண்டி தலைமையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலர் குணசேகரன் ,உதவி வேளாண்மை அலுவலர் ரேணுகாதேவி ,துணை தோட்டக்கலை அலுவலர் பாண்டியன் கிராம நிர்வாக அலுவலர் மின்வாரியத் துறை ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *