• Fri. Apr 26th, 2024

5 மொழிகளில் நன்றி சொன்ன கமல்

ByA.Tamilselvan

Jun 7, 2022

கமல் நடிப்பில் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3 ம் தேதி வெளியான விக்ரம் படம் மிகபிரமாண்டமான வெற்றி பெற்றுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டுமே 200 கோடி வசூலை எட்டியதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
விக்ரம் வெற்றிபெற்றதை தொடர்ந்து தமிழ், இந்தி,கன்னடம்,தெலுங்கு,மலையாளம் ஆகிய 5 மொழிகளில் நன்றி தெரிவித்து கமல் வீடியோ வெளியிட்டுள்ளார்.மேலும் படத்தில் தன்னுடன் நடித்த பகத்பாசில்,விஜய்சேதுபதி, சூர்யா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.மேலும் இயக்குனர் லோகேஷ்கனகராஜ் திறமைபாராட்டினார் கமல்.மேலும் சூர்யாவுடன் அடுத்து இணையும் படத்தில் அவருக்கான நன்றியை முழுவதுமாக காட்ட விருக்கிறேன்.விக்ரம் படத்தில் 3 நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் திரையரங்கை தம்பி சூர்யாஅதிரவைத்துள்ளார் என்று புகழாரம் தெரிவித்துள்ளார்.
விக்ரம் 3 படம் சூர்யா -கமல் இணைந்து கலக்கும் மிகபிரமாண்டமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *