ஜியோ நிறுவனம் தனது ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. அதன்படி 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.155 திட்டம் ரூ.186 ஆக உயர்ந்துள்ளது. அதனைப் போல 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ185 திட்டம் ரூ.222 ஆகவும்,336 நாட்களில் வேலிடிட்டி கொண்ட 749 ரூபாய் திட்டம் 899 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.
மேலும் புதிய ஜியோ போன் வாங்கவும் இரு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஜியோபோனை வாங்க வாடிக்கையாளர்கள் ரூ.1,999, ரூ.1,499 மற்றும் ரூ.749க்கு ஆகிய மூன்று முறைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். இந்த திடீர் அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.