• Mon. Dec 9th, 2024

மாநகராட்சி அலுவலகங்களில் இனி பயோமெட்ரிக் முறை

Byகாயத்ரி

Jun 15, 2022

மாநகராட்சி அலுவலகங்களில் சரியான வருகை பதிவேட்டை அரசு ஊழியர்கள் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்த நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவேடு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்திருந்தார்.

இந்த பயோ மெட்ரிக் முறை மூலம் வருகைப்பதிவேடு பின்பற்றப்படும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதற்கட்டமாக தலைமை மற்றும் மண்டல அலுவலகம் உட்பட அனைத்து இடங்களிலும் பயோ மெட்ரிக் இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.