
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் பட்சத்தில் ஜூலை 21-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. 29ந் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். மனுக்களை திரும்ப பெற அடுத்த மாதம் 2ந் தேதி கடைசி நாள். குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு பணி அதிகாரி முகுல் பாண்டே, இணைச்செயலாளர் சுரேந்திரகுமார் திரிபாதி ஆகியோர் துணை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.