• Fri. Jun 19th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

நாடு எங்க சார் போகுது பிரகாஷ்ராஜ் ட்விட்டரில் கேள்வி

ByA.Tamilselvan

Jul 14, 2022

நம்ம நாடு எங்க சார் போதுது என நடிகர் பிரகாஷ்ராஜ் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்
புதிய நாடாளுமன்ற கட்டத்தின் மேற்பரப்பில் இந்தியாவின் தேசிய சின்னமான நான்குமுகச் சிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 11ஆம் தேதி திறந்துவைத்தார்
இதையடுத்து நமது தேசிய சின்னத்தை மோடி அரசு அவமதித்து விட்டதாகவும், அரசியல் சாசன விதியை பிரதமர் மோடி மீறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.நமது தேசிய சின்னம் அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கும். ஆனால் தற்போது புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள சின்னத்தில் தேவையில்லாமல் சிங்கங்கள் ஆக்ரோஷத்துடன் இருப்பதுபோல் வைக்கப்பட்டுள்ளது.


இது மக்களை அச்சுறுத்துவதுபோல் உள்ளது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ், புதிதாக வைக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தைக் குறிப்பிட்டு நாடு எங்கே செல்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டரில், ராமர், அனுமன், அசோக சின்னத்தைக் குறிப்பிடும் படம் ஒன்றையும் இணைத்து பதிவிட்டுள்ளார். அதில் ராமர், அனுமன், அசோக சின்னம் இதற்கு முன்பு அமைதியாக இருந்தது என்றும் ஆனால் தற்போது இந்த மூன்றும் ஆக்ரோஷத்துடன் இருப்பதுபோன்று குறிப்பிடப்பட்டுள்ளது.