இந்திய அஞ்சல்துறை மூலும் இட்லி,தோசை மாவை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் சோதனை அடிப்படையில் துவக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் சோதனை அடிப்படையில் இட்லி,தோசை மாவுகளை வீடுகளுக்கே நேரடியாக சென்று டெலிவரி செய்யும் திட்டத்தை இந்திய அஞ்சல்த்துறை தொடங்கியுள்ளது. .இது குறித்து கர்நாடக தலைமை போஸ்ட மாஸ்டர் எஸ்.ராஜேந்திரகுமார் தெரிவிக்கையில் தற்போது சிறிய அளவில்தான் தொடங்கியிருக்கிறோம். மக்களின் வரவேற்பை பொறுத்து பெரிய அளவில் விரிவுபடுத்தி உணவுப்பொருட்கள் தொழிலில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களுடன் கை கோர்த்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் என்றார்.