வகுப்புவாத அரசியலுக்கு எதிராக.. 40% ஊழல் சர்க்காருக்கு எதிராக நான் வாக்களித்துள்ளேன்; உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள்” என நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று காலை அவரது தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வகுப்புவாத அரசியலுக்கு எதிராக.. 40% ஊழல் சர்க்காருக்கு எதிராக நான் வாக்களித்துள்ளேன்; உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள்.. அனைவரையும் உள்ளடக்கிய கர்நாடகாவுக்கு வாக்களியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.